வால்பாறை குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம்.!!

வால்பாறை அருகே உள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் கூண்டு வைத்து புலியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.



வால்பாறை: வால்பாறையில் கூண்டு வைத்து புலியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகப் புலி ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதி அருகே உலா வந்தது.



அவ்வழியாகச்சென்ற பொதுமக்கள் புகைப்படம் எடுத்துச் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று நேற்றிரவு கண்காணிப்பு பணிமூலம் அதை உறுதி செய்துள்ளனர்.



அதைத்தொடர்ந்து, இன்று தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவு படி புலி நடமாடிய அப்பகுதியில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசனின் நேர்பார்வையில் மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் அப்பகுதியில் கூண்டு வைத்து புலியைப் பிடிக்கத் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், புலியைப் பிடிக்கும் வரை அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடவேண்டாம் என்று வனத்துறையினர் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...