வால்பாறை முடீஸ் பஜாரில் புலிகள் நடமாட்டம்; ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் வனத்துறை!

வால்பாறை முடீஸ் பஜாரில் பகல் நேரத்திலே புலிகள் நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் புலிகளின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது முடீஸ் பஜார் பகுதி. இப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தேயிலைத்தோட்டங்கள் உள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இந்த தொழிலாளர்கள் வழக்கம் போல தேயிலைத்தோட்டப்பணிக்கு வேலைக்காகக் காலையில் சென்றனர். அப்போது நடந்து செல்லும் வழியே புலியைப்பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து அச்சத்துடன் ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் உடனடியாக இதுக்குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் விரைந்தனர்.



இதனையடுத்து உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வன பாதுகாப்பு படை உதவி வனப் பாதுகாவலர் விஜயன், வனத்துறை மருத்துவர் சுகுமாரன், வனச்சரகர் நடராஜன் மற்றும் வனவர் உமர் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.



இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி கள இயக்குனர் கணேசன் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டார். இதோடு புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...