கிணத்துக்கடவில் அதிக பாரம் ஏற்றிய டிப்பர் லாரிகள் பறிமுதல்.!!

கிணத்துக்கடவு அரசம் பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 3-டிப்பர் லாரிகளுக்கு ரூ.1.21 லட்சம் அபராதம்.


கோவை: கிணத்துக்கடவு அரசம் பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 3-டிப்பர் லாரிகளுக்கு ரூ.1.21 லட்சம் அபராதம் விதித்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்டம் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் சுரேஷ் ஆகியோர் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாகக் கல்குவாரியிலிருந்து பாறை கல் மற்றும் எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை சோதனையிட்டனர்.

அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக பாரம் ஏற்றி வந்ததை அடுத்து 3 டிப்பர் லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.



மேலும் அதிக பாரம் ஏற்றி வந்ததாக மூன்று லாரிகளும் ஒரு லட்சத்து 21ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதித்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...