வால்பாறையில் திடீர் பள்ளம்: அச்சத்தில் மக்கள்!

வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் கக்கன் காலனி பகுதியில் அமைந்துள்ள நகராட்சி கால்பந்து மைதானத்தின் சீரமைப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.

முழுமையாக முடிக்கப்படாததின் காரணமாக நேற்று பெய்த கன மழையில் தரைப்பகுதி உள்வாங்கி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

உடனடியாக அதைச் சரி செய்யாவிட்டால் அதனை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர் (சுமார் 16-அடி உயரம்) இடிந்து கீழ்ப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மேல் விழுந்து சேதமாக வாய்ப்பு உள்ளது.

மேலும் இப்பகுதி மக்களின் நடைபாதையாக உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இப்பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.



மேலும் சிறு குழந்தைகள் இப்பகுதியில் கால்பந்து விளையாடி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட வால்பாறை நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், கால்பந்து மைதான நடைபாதையில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய வேண்டும்.

ஆபத்தைக் கருத்தில் கொண்டு விரைவாகச் செய்யாவிடில் பேராபத்து ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...