பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது புகார் அளிக்கவும், இக்கட்டான சூழலில் பெண்களுக்கு SOS செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம் அறிவுரை வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் பியூலா மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையேற்று நடத்தியதோடு, மாணவிகளிடையே விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது இளம் தலைமுறையினரான நீங்கள் உங்கள் பகுதிகளில் நடக்கும் பெண் சிசுக்கொலையை தடுக்க வேண்டும் என மாணவிகளிடம் தெரிவித்தார். மேலும் கருவில் உள்ளத குழந்தை ஆணா? பெண்ணா? என்று பார்த்து தகவல் தெரிவிப்பது சட்டப்படி குற்றம் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சம்பந்தமான இடையூறுகள் பற்றித் தைரியமாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் காவல்நிலையம் வருவதற்கு அச்சமாக இருக்கும் பெண்கள் வரதட்சணைக்கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் பற்றியத் தகவலைத் தெரிவிக்க காவல்துறையின் SOS செயலியை பயன்படுத்தலாம் என கூறினார். இன்றைய சூழலில் அனைவரும் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துக்கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறினார். மேலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைக்கான அவசர உதவி எண் 181 எண்ணையும் 1098 கட்டனமில்லா எண்ணையும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். இந்தக் கருத்தரங்கத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், பள்ளி முதல்வர் ஹென்ட்ரி, காவலர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.