ரூ. 55.17 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமானப் பணிகளைஎம்.பி. சண்முகசுந்தரம் மேம்பாலம் பணிகளை ஆய்வு செய்தார்.
கோவை: பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் 30 நாட்களில் காரிடார் அமைக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சண்முகசுந்தரம் எம்.பி தெரிவித்தார்.
பொள்ளாச்சியிலிருந்து கேரளா மாநிலத்துக்கு செல்லும் முக்கிய போக்குவரத்து வழித்தடமான பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் வடுகபாளையம் பிரிவில் குறுக்கிடும் ரயில்பாதையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.55.17 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு 2018ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
பொள்ளாச்சி - போத்தனூர் ரயில் பாதையின் ஒரு புறம் 17 தூண்கள், மறுபுறம் ஒரு தூண் என மொத்தம் 18 தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் ஓடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத் துறை சார்பில், பாலத்தின் இரு பக்கமும் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில்வே தண்டவாளத்தின் மேல், இரும்பு காரிடார்கள் அமைத்து பாலத்தை இணைக்கும் பணி மட்டும் நிறைவடையாமல் உள்ளது.

இந்நிலையில், எம்.பி. சண்முகசுந்தரம் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது,

பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் நடைபெற்றும் ரயில்வே மேம்பால கட்டுமானப்பணியில் இரும்பு காரிடார்கள் அமைக்க ஒப்புதல் கிடைக்காமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. 30 நாட்களில் இரும்பு காரிடார்கள் அமைக்கும் பணி நிறைவடையும்.
இதையடுத்து, பொள்ளாச்சி - பாலக்காடு நெடுஞ்சாலையில் கட்டுமானப்பணிகள் 3 மாதங்களில் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.