கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு.!!

நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில்‌ அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ பல்வேறு இடங்களில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று 28.09.2021 நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.67-க்குட்பட்ட திருச்சி சாலையிலுள்ள தனியார்‌ பள்ளி அருகிலும்‌,



64-வது வார்டுக்குட்பட்ட கோ-ஆப்பரேட்டின்‌ காலனி பொக்ஸ்‌ ஆர்ட்ஸ்‌ அருகிலும்‌ தூர்வாரப்படவுள்ள மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்களைப் பார்வையிட்ட ஆணையாளர்‌, மழைநீர் வடிகால்‌ கால்வாயில்‌ உள்ள அடைப்புகளை தூய்மைபணியாளார்களைக்‌ கொண்டு தூர்வாரி, தூய்மைப்படுத்தி நீரானது தேங்காமல்‌ சீராக செல்லும்‌ வகையில்‌ பணிகளைச் செய்திட வேண்டுமென அலுவலர்களிடம்‌ தெரிவித்த பின்ன‌ர், உப்பிலி பாளையம்‌ நகாப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில்‌ கூடுதல்‌ கட்டிடம்‌ கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்‌, சிங்காநல்லூர்‌ கமலா மில்‌ குட்டை ரோடு மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்‌ பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,



அங்குள்ள பொதுக்கழிப்பிடம்‌ சுகாதாரமான முறையில்‌ உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்கள்‌.



தொடர்ந்து, வார்டு எண்‌.58க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம்‌ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் காப்பிணி தாய்மார்களுக்குப் பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌, தாய்‌ சேய்களுக்குப் போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, டாக்டர்‌.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில்‌ காரப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்த பின்னா்‌, கபிலன்‌ கார்டன்‌ பகுதியில்‌ சுகாதார மையம்‌ கட்டுவதற்கான இடத்தினை குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ செந்தில்குமார்‌ இரத்தினம்‌, நகர்நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜ்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ முருகா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...