பொள்ளாச்சியிலிருந்து ஜமீன்களத்தூர் வழித்தடத்தில் நிறுத்தப்பட்டப் பேருந்துகளை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யக்கட்சியின் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதி தான் ஜமீன் களத்தூர். இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.
பெரும்பாலும் இப்பகுதி மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றாலும் பொள்ளாச்சிக்கு தான் செல்ல வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்ட பொழுது பொள்ளாச்சி – ஜமீன்களத்தூர் வழியாக செல்லும் அரசுப்பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மற்றப்பகுதிகளுக்கெல்லாம் பேருந்து சேவை இயக்கப்படும் நிலையில், இந்த வழித்தடத்தில் இன்னமும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
எனவே இங்கே ஜமீன்களத்தூர் பகுதியில் பேருந்துகள் இல்லாததால் சுமார் 3 கீமீ தொலைவில் உள்ள புரவிபாளையத்திற்கு வந்து பேருந்து சேவையைப் பெற வேண்டியுள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

எனவே பொள்ளாச்சி – ஜமீன்களத்தூர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட 1N, 18B என்ற எண் கொண்ட பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யக்கட்சியின் சார்பில் பொள்ளாட்சி சார்ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.