கோவையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 7 கல்குவாரிகளுக்கு அபராதம்..!

கோவை கொண்டையம் பாளையத்தில் 3 குவாரிகள், பச்சாபாளையம், கள்ளம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு குவாரிகள் என மொத்தம் 7 குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 7 கல் குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் சூலூர், மதுக்கரை அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி கற்கள் எடுக்கப்படுவதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மொத்தம் 122 கல்குவாரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்குவாரி செயல்பட கனிமவளத் துறையில் அனுமதி மட்டுமின்றி வருவாய்த்துறை, புவியியல் துறை, வேளாண் துறை, உள்பட பல்வேறு துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும்.

கோவை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கொண்டையம் பாளையத்தில் 3 குவாரிகள், பச்சாபாளையம், கள்ளம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு குவாரிகள் என மாவட்டம் முழுவதும் 7 குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல் புகார் வருவாய்த் துறையினருக்கு பரிந்துரை செய்கிறோம். அவர்களும் இது தொடர்பாக கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகள் குறித்த புகார்களை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....