கோவை காட்டூர் போலீசார் சார்பில் ஆட்டோ டிரைவர்களுடன் குற்ற சம்பவங்கள் தடுப்பது குறித்து ஆலோசனை - உதவி ஆணையர் பங்கேற்பு..!

சந்தேகத்திற்கிடமாக யாரையாவது பார்க்க நேரிட்டால், உடனடியாக காட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையம் சார்பாக சென்ட்ரல் பேருந்து பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் உடன் குற்றம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது .

அப்பொழுது சதீஷ்குமார் ஆட்டோ டிரைவர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

நீங்கள் எப்பொழுதுமே மக்களோடு மக்களாக, மக்கள் கூடக் கூடிய இடங்களில் நீங்கள் இருக்கக்கூடியவர்கள். ஆதலால் சந்தேகப்படக் கூடிய நபர்கள், உங்களுடைய வழக்கமான வாடிக்கையாளர்கள், புதிய நபர்கள் இவர்களை உங்களால் எளிமையாக கண்டறிய முடியும்.

எனவே, சந்தேகத்திற்கிடமாக யாரையாவது நீங்கள் பார்க்க நேரிட்டால், உடனடியாக காட்டூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



குற்ற சம்பவங்கள் தடுப்பதில் ஆட்டோ டிரைவர்களும் எங்களோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குற்ற சம்பவத்தை தடுப்பதற்கு காவல்துறை மட்டும் போதாது.

இந்த சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே குற்ற சம்பவங்களை தடுக்க முடியும், உட்பட பல்வேறு விதமான ஆலோசனைகளை தெரிவித்தார்.

இதில் காவல் ஆய்வாளர் லதா எஸ்.ஐ வெள்ளியங்கிரி மற்றும் காட்டூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...