கோவையில் சாலையில் கிடந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி..!

கோவை க.க சாவடி அருகே சாலையில் கிடந்த ரூ.20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: கோவை க.க சாவடி அருகே சாலையில் கிடந்த ரூ.20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை, காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கோவை க.க சாவடி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பம்மாள் (60). இவர் நேற்று மதியம் வீட்டிற்கு செல்ல வேலந்தாவளம் சாலையில் வந்து கொண்டிருந்தாக தெரிகிறது.

அப்போது, சாலை ஓரத்தில் செல்போன் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த மூதாட்டி கருப்பம்மாள் அருகே இருந்த க.க சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (24) என்கிற இளைஞரின் செல்போன் என தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இளைஞருக்கு போலீசார் தகவல் அளித்தனர். பின்னர், காவல் நிலையம் வந்த அந்த இளைஞரிடம் மூதாட்டியே நேரடியாக செல்போனை ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து, சாலையில் கிடந்த செல்போனை பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியை க.க. சாவடி உதவி ஆய்வாளர் சரவணன் பொன்னாடை போற்றி பாராட்டினார். இதேபோல், மூதாட்டியின் செயலுக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....