தமிழக ஜவுளி உற்பத்தித்துறையில் முதலீடு செய்ய 58 சதவீத இளைஞர்கள் ஆர்வம்; இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎப்) சர்வே தகவல்!

தமிழக ஜவுளி உற்பத்தித்துறையில் முதலீடு செய்வதில் 58 சதவீத இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதாக இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.



கோவை: உலக அளவில் கொரோனா தொற்றிற்கு பின் ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவுக்கும், ஜவுளித்துறைக்கும் இடையே உள்ள சூழலைத் தமிழக ஜவுளித்துறை எப்படி எதிர்நோக்குகிறது? என்பதை அறிந்துக்கொள்வதற்காக இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் தொழில்முனைவோருக்கான சர்வே எடுக்கப்பட்டது. 

இந்த சர்வேயில் நூற்பாலைகள், ஒட்டு மொத்த கட்டமைப்பை வைத்துள்ள நிறுவனங்கள், ஆயுத்த ஆடை நிறுவனங்கள், வீவிங், சாய ஆலைகள் மற்றும் ஹோம் டெக்ஸ்டைல்ஸ் துறையையைச்சேர்ந்த 257 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்களில் ஒட்டுமொத்த வருடாந்தர வியாபார மதிப்பு ரூபாய் 36000 கோடியாக உள்ளது. இந்நிலையில் என்னென்ன கேள்விகள் சர்வேயில் கேட்கப்பட்டுள்ளது? அதற்கு என்ன பதில்கள்? கிடைத்துள்ளது என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.

தற்போதைய வியாபாரத்தை இரட்டிப்பாக்க தேவைப்படும் காலம என்ன?

தற்போது நடைபெறும் வருடாந்திர வியாபாரத்தை, எத்தனை வருடங்களில் இரட்டிப்பாக்க திட்டம் வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, 30% பேர் 3 வருடத்தில் (25% வருடாந்திர வளர்ச்சி), 18% பேர் நான்கு வருடத்தில் (20% வருடாந்திர வளர்ச்சி 26% பேர் ஐந்து வருடத்தில் (15% வருடாந்திர வளர்ச்சி) என்று தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 76% நிறுவனங்கள் புது முதலீடுகளை மேற்கொண்டு 3 முதல் 5 வருடங்களுக்குள், தங்களது வியாபாரத்தை இரட்டிப்பாக்க முயல்கின்றனர் என்பது, தமிழக ஜவுளித் துறையில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. மேலும் ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள பல்வேறு துறைகளில், முதலீட்டு ஆர்வம் ஹோம் டெக்ஸ்டைல்ஸ் துறை மற்றும் ஆயத்த ஆடை மற்றும் வீவிங் துறைகளில் அதிகமாக காணப்படுகிறது.

தமிழகம் மதிப்புக்கட்டப்பட்ட ஜவுளி பொருட்கள் தயாரிப்பில், முன்னணி பெறுவதற்கு இந்த முதலீடுகள் உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜவுளித்தொழிலில் இளம் தலை முறையினரின் ஆர்வம் எந்த அளவில் உள்ளது?

இளம் தலைமுறையினர், இந்த ஜவுளி உற்பத்தித் துறையில் ஆர்வம் காட்டுகின்றனவா? என்ற கேள்விக்கு, 58% பேர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் என்றும், 31% பேர் குறைவான ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் பதில் அளித்து இருந்தனர். இளம் தலைமுறையினரிடையே இத்தொழில்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்களின் புதிய சிந்தனைகளுக்கும், தொழில்நுட்பம் சார்ந்தப் போக்கிற்கும், ஏதுவான வியாபாரத்தை இத்துறையிலேயே கொண்டு வருவதற்கும், எங்களைப்போன்ற தொழில் முனைவோர் சங்கங்கள் செயல்பட்டால், இந்த 31 சதவீத பேரையும் ஆர்வம் மிக்கவர்களாக மாற்ற முடியும்.

பங்கு சந்தைகளின் பங்குகள் எப்படி பட்டியலிடப்படுகிறது?

பங்குசந்தைகளில், உங்கள் நிறுவனத்தின் பங்குகளைப் பட்டியலிடத் திட்டம் உள்ளதா? என்ற இந்த கேள்விக்கு 16% பேர் (40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்) ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தையின், மொத்த மதிப்பு 240 லட்சம் கோடியாக இருக்கும் இன்றைய நிலையில், பட்டியலிடப்பட்ட ஜவுளி நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு வெறும் 2 லட்சம் கோடியாக மட்டுமே உள்ளது. இந்திய பங்குச் சந்தை வளர்ந்துவரும் நிலையில், குறிப்பாக ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் நல்ல மதிப்புப் பெற்று வருவதாலும், தமிழக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பங்குச் சந்தைகளில் பட்டியலிட முயற்சி எடுக்க முன்வந்திருப்பது நல்ல அறிகுறியாக இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். ஆர்வமுள்ள நிறுவனங்களின், இந்த பங்குச் சந்தை முயற்சியை முன்னெடுக்க எங்கள் ITF சங்கம் உதவும் பொருட்டு ஒரு நிபுணர்கள் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம்.

குறிப்பாக சைனாவிலிருந்து இந்திய ஜவுளித்துறைக்கு நகரும் ஏற்றுமதி வியாபார வாய்ப்புகள், மத்திய அரசின் முக்கிய அடிப்படைச் சீர்திருத்தங்கள், தமிழக அரசின் சீரியத் தொழில்துறை வளர்ச்சிக்கானத் திட்டங்கள், வங்கிகளில் குறைந்த வட்டியில் தாராளமாக புது முதலீடுகள் செய்ய கடன் கிடைப்பது, தமிழகத்தின் பலமாக ஜவுளி உற்பத்தித் துறை கட்டமைப்பு தற்போது உலக அளவில் கவனம் பெற ஆரம்பிப்பது போன்ற காரணங்களால் இத்தகைய முதலீட்டு ஆர்வம் அதிகரித்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். மேலும் புது முதலீடுகளை சரியான துறைகளில், குறிப்பாக மதிப்புக்கூட் கட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் செய்யவும், இளைய இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோரின் ஆர்வத்தை அதிகப்படுத்துவதுற்கும், நன்றாக இயங்கும் நிறுவனங்களை இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளை பட்டியலிடுவதற்கும், ITF அமைப்பு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....