அசாமில் நடக்கும் கலவரத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்; கோவையில் தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

அசாமில் நடக்கும் கலவரத்திற்குக் காரணமான பாஜக அரசைக்கண்டிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் நடைபெற்றப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: அசாம் மாநிலத்தில் மக்களின் குடியிருப்பை அகற்றும் மாநில அரசிற்கு எதிரானப் போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழ்ந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இதற்குக் காரணமாக இருந்த அம்மாநில அரசையும், பாஜக கட்சிக்கும் எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கோவையில் தமுமுக மாவட்ட தலைவர் அகமது கபீர் அவர்கள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தின் போது அசாம் மாநில முதலமைச்சர் உருவப்படத்தை எரித்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.



மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உம்மர், தமுமுக மாநில செயலாளர் சாதிக் அலி, அக்பர், சாகுல் அமீது, ஜாபர் சாதிக், சர்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்டச் செயலாளர் பாபு, தமுமுக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுக துணைச் செயலாளர்கள் சாகுல், ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணைச் செயலாளர் இப்ராஹிம், SMI அம்ஜத் அலிகான், இளைஞரணி மைதீன், மருத்துவ அணி ரபிக், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பாஜக அரசிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். இறுதியாக உரை தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹ்மத் நன்றியுரைத் தெரிவித்தார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....