கிணத்துக்கடவு தொகுதி, 95 வது வட்டம் திமுக கட்சியின் கொடியேற்று விழா, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் குறைதீர்ப்பு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கோவை: கிணத்துக்கடவுத் தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி வடக்குப்பகுதி 95 வது வட்டத்துக்கு உட்பட்ட சில்வர் ஜூப்ளி பகுதியில் திமுக கட்சியின் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கலந்துக்கொண்டு திமுக கட்சிக்கொடியை ஏற்றியதோடு அப்பகுதியிலுள்ள மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதனையடுத்து அங்குள்ள மக்களிடம் குறைகளைக்கேட்டறிந்த நிலையில் மக்கள் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாக அவரிடம் புகார் அளித்தனர்.
குறிப்பாக குறிச்சி வடக்கு சில்வர் ஜூப்ளி பகுதியில் வசிக்கும் 60 மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எனவும், பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் இன்னமும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். இதோடு இதுக்குறித்து கோரிக்கை மனுவையும் அப்பகுதி மக்கள் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் குறிச்சி வடக்குப்பகுதி பொறுப்பாளர் S.A. காதர்,95வது வட்டக் கழகப் பொறுப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.