கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியைச்சேர்ந்த 3 மாணவர்கள் இன்று வாளையாறுஅணையில் குளிக்கச்சென்ற போது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி உயிரிழந்தனர். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கோவை: இயற்கை எழில் கொஞ்சும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது வாளையாறு அணை. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியாக இருக்கும் இந்த இடத்தைப்பார்ப்பதற்கே கோவையைச்சேர்ந்த பெரும்பாலான மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா வருவது வழக்கம்.
தற்போது குளிர்ச்சியானச் சூழல் நிலவுவதால் அதனை ரசிப்பதற்காக கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியைச்சேர்ந்த மாணவர்கள் வாளையாறு சென்றுள்ளனர். அங்கு அணையில் இறங்கி குளித்த நிலையில், திடீரென அணையில் ஏற்பட்ட சுழல் காரணமாக 3 பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து அந்தப்பகுதியில் வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து பாலக்காடு தீயணைப்புத் துறைக்கும், வாளையாறு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் தண்ணீரில் சிக்கி 3 பேரை தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. முதற்கட்ட விசாரணையில் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் பாலிடெக்னிக் படிக்கக்கூடிய மாணவர்கள் சஞ்சீவ், ராகுல்,பூர்னேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த மூன்று பேரும் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என்பதால் போலீசார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.