காந்தி ஜெயந்தி விழாவை விடுமுறை நாளாக அறிவிக்காமல், மகாத்மா காந்தி குறித்து விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசிற்கு பொள்ளாச்சி மகாத்மா காந்தி ஆசிரம அறக்கட்டளை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழாப கொண்டாடப்பட்டுவருகிறது. மேலும் உலக ஐக்கிய நாடுகள் சபை இந்நாளை அகிம்சை தினமாக அறிவித்துள்ளது.
ஆனால் இதுவரை அதற்கானப் பலன் எதுவும் இல்லை எனவும், நமது நாட்டில் சாதாரண விடுமுறை நாளாக அறிவித்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படுவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் மகாத்மா காந்தி பற்றியும் அவரது தன்னலமற்ற சேவை, சத்தியம், அகிம்சை போன்ற சிறப்புகளைப் பற்றி அறிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே வரும் தலைமுறையினர், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் தேசபக்தி உணர்வை ஏற்படும் வகையில் வரும் அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தி தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்கக்கூடாது என ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரம அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு மகாத்மா காந்தியை பற்றியும் அவரதுக் கொள்கை பற்றியும் கருத்தரங்கம், கலந்துரையாடல், கட்டுரை, கவிதை, ஓவியம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காந்தி ஆசிரம அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.