கோவையில் தற்போது நிலவும் ரயில்போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய ரயில்பாதையை தென்னக ரயில்வே மீட்டெடுப்பதோடு அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் நஞ்சுண்டாபுரம் மற்றும் ராமநாதபுரம் இடைப்பட்ட பகுதியில் இணைப்பு ரயில்பாதை ஒன்று செயல்பட்டுவந்தது.
கடந்த 1891 ஆம் ஆண்டு முதல் இந்த ரயில் பாதை கோவையில் இருந்து போத்தனூர் செல்லும் ரயில் பாதையையும், இருகூரிலிருந்து போத்தனூர் செல்லும் ரயில்பாதையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவை மக்களுக்கான முதல் ரயில் சேவைக்கான பாதை என்றே இதனை கூறலாம். இதோடு பழமை வாய்ந்த நீலகரி எக்ஸ்பிரஸ் ஓடிய ரயில் பாதையாகவும், கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள பெசாவர் நகருக்கு இயக்கப்பட்ட கிராண்டிரங்க் இணைப்பு எக்ஸ்பிரஸ் சென்று வந்த தடம் என்ற பெருமையை இதுக்கொண்டிருந்தது. ஆனால் 1.15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் பாதை தென்னக ரயில்வே மூலம், கோவையிலிருந்து வடகோவை, பீளமேடு வழியாக இருகூர் செல்லும் ரயில்பாதையாகப் பிரிக்கப்ட்ட பிறகு அந்த பாதை எங்கு சென்றதே என தெரியவில்லை.
ஆனால் தற்போதும் எந்தவித அக்கிரமிப்பும் இல்லாமல் அப்படியே தான் உள்ளது. எனவே கோவையில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க தென்னக ரயில்வே இந்த சிறிய இணைப்பு ரயில்பாதைத்திட்டத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர். இவ்வாறு மேற்கொள்ளும் போது மேட்டுப்பாளையம் வரை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரசுக்கு இன்ஜின் மாற்றத்தேவையில்லை, கோவையில் இருந்து புறப்படும் சில ரயில்களை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கலாம், இதோடு கோவை ரயில் நிலையத்தின் வெளியே சிக்னல்காகவும், பிளாட்பாரத்திற்காகவும் ரயில்கள் நிற்க வேண்டிய நேரம் வெகுவாக குறைவது போன்ற பல நன்மைகள் உள்ளன.
எனவே இனிவரும் நாள்களில் சுற்றுவட்டார பகுதிகளில் புறநகர் மின்சார ரயில்களை இயக்கவும் இந்த சிறிய ரயில் பாதை மிகவும் உதவியாக இருப்பதால், தென்னக ரயில்வே வாரியம் உடனடியாக தலையிட்டு இதுவரை யாருக்கும் தெரியாத இந்த ரயில்பாதை மீட்டெடுக்க வேண்டும் எனவும், உடனடியாக அளவீடு செய்து கோவையின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் மற்றும் ரயில் ஆர்வலர்கள் கோரிக்கையாகவும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.