கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்.!!

கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைப்பெற்ற நிலையில், 4-மனுக்களுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு.


கோவை: கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைப்பெற்ற நிலையில், 4-மனுக்களுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கொரோனா தொற்று காரணமாகப் பொதுமக்களிடம் திங்கட்கிழமை தோறும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் மக்களிடம் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல ஒருங்கிணைப்பு அலுவலர் அம்சவேணி கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றார்.

இதில் நத்தம் பட்டா கேட்டு 4-பேரும், வீட்டுமனை பட்டாக்கள் கேட்டு 6-பேரும், பூமி உட்பிரிவு கேட்டு ஒருவரும், ஜாதிசான்றுகேட்டு 6-பேரும், மின் இணைப்பு சான்றிதழ் கேட்டு ஒருவரும் என மொத்தம் 18-மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில் 4-மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன. மீதியுள்ள 14-மனுக்கள் குறித்து விசாரணை நடத்தித் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த முகாமில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கனகேஸ்வரி, கிணத்துக்கடவு மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ் உட்பட வருவாய் துறை அதிகாரிகள் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...