கோவை கிணத்துக்கடவுப் பகுதியில் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மறைந்த திமுக நிர்வாகிகளின் வீட்டிற்குச்சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கிருஷ்ணசாமிபுரத்தில் உள்ள முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தாயார், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சொக்கலிங்கம், பெரியார் நகர் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளின் உறவினர்கள் ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கட்சியின் சார்பாக இன்று கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வுகளில் கிணத்துக்கடவு பேரூராட்சி முன்னாள் தலைவர் கதிர்வேல், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், கிணத்துக்கடவு திமுக நகர செயலாளர் கனகராஜ், கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.