தென்னிந்தியக் கடற்படை தலைமையகம் மற்றும் ஐஎன்எஸ் அக்ரானியுடன் கீழ் இயங்கும் எர்கிராப்ட் அண்ட் இன்ஜின் ஹோல்டிங் யூனிட்டுன் இணைந்து கொடிசியாவின் CDIIC கோவை ஐஎன்எஸ் அக்ரானியில் உள்நாட்டுத் தயாரிப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம்.
கோவை: தென்னிந்திய கடற்படை தலைமையகம் (HQSNC) மற்றும் ஐஎன்எஸ் அக்ரானியுடன் கீழ் இயங்கும் எர்கிராப்ட் அண்ட் இன்ஜின் ஹோல்டிங் யூனிட்டுன் (A&EHU) இணைந்து கொடிசியாவின் CDIIC கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஐஎன்எஸ் அக்ரானியில் உள்நாட்டுத் தயாரிப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம் 27.09.2021 அன்று நடைபெற்றது.
இந்திய கடற்படை மற்றும் கடற்படை விமானவியல் சார்ந்த உற்பத்திப் பொருட்களை உள்நாட்டில் தயாரிப்பது குறித்த செயல்திட்டம் 2017-2022ஐ உறுதிப்படுத்தவும், LRUன் விமானம் மற்றும் கப்பல்களின் உதிரிப்பாகங்கள், கருவிகள், தரைக் கட்டுப்பாடு மற்றும் கையாளும் கருவிகள் ஆகியவற்றில் உள்ள பழுது நீக்கும் வசதிகள் ஆகியவற்றில் தற்சார்பு நிலையை உருவாக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கொச்சி நேவல் ஏர்கிராப்ட் யார்டின் கமோடர் சூபரின்டென்டென்ட் காமோடர் யோகேஷ் சி பாண்டே தலைமை வகித்தார். சூலூர் ஏர்கிராப்ட் கமோடர் இ.டேவிட் கலந்துகொண்டு உரையாற்றினார். CDIIC-ன் இயக்குநர்கள் எம்.வி.ரமேஷ் பாபு, வி.திருஞானம், வி.சுந்தரம், ஆர்.ராமமூர்த்தி, இ.கே.பொன்னுசாமி மற்றும் கொடிசியாவின் தொழிலக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இந்த மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கலந்துகொண்டு, வான்வெளி மற்றும் கடல்சார் பொறியியல் துறையில் தகுதி வாய்ந்தவர்களாகக் கண்டறியப்பட்டனர். பழுது நீக்குதல் மற்றும் மாதிரி உற்பத்திக்கு என கலந்துகொண்ட தொழில்முனைவோர் ஆர்வமுடன் பார்வையிட்டுப் பயன்பெற்றனர்.

250க்கும் அதிகமான இயந்திர பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின் பயனாக ரூபாய் 25-கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வான்வெளி மற்றும் கடல்சார் பொறியியல் சார்ந்த தயாரிப்பில் கவனம் செலுத்தி, உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பெருக்கி தற்சார்பு நிலையை எட்டுவதற்கான ஒரு தளமாக இந்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.