கிணத்துக்கடவில் ஆதார் சேவை மையத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி.!!

ஆதார் மையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். கிணத்துக்கடவில் கூடுதலாக ஒரு ஆதார் சேவை மையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் கூடுதலாக ஒரு ஆதார் சேவை மையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் சேவை மையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் நாளொன்றுக்கு 25-பேருக்கு மட்டுமே ஆதார் சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தற்போது நியாயவிலைக்கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகைப் பதிவு நடைமுறையில் இருப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பலருக்குக் கைரேகை பதிவு விழுவதில்லை, இதனால் ஆதார் சேவை மையத்தில் கைரேகை அப்டேட் செய்வதற்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.



ஆனால் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்றுவதால் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது.



இந்த நிலையில் இன்று வழக்கம் போல் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், ஆதார் மையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.

ஆனால் ஆதார் சேவை பணிகள் மந்தமாக நடைபெற்றதால் அங்கிருந்த பெண்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இதனால் கிணத்துக்கடவு பகுதியில் கூடுதலாக ஒரு ஆதார் சேவை மையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...