கோவையில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக திமுக ஆட்சியில் கட்டிக்கொடுத்த வீடு; தனக்குத் தான் சொந்தம் என தனிநபர் மிரட்டல்; ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்!

கோவை சுந்தராபுரத்தில் திமுக ஆட்சியின் போது அன்றைய முதல்வர் கருணாநிதி கட்டிக்கொடுத்த வீட்டினைத் தனக்கு தான் சொந்தம் என தனிநபர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை சுந்தராபுரத்திற்கு அருகே உள்ள குறிச்சி கிராமத்தைச்சேர்ந்த மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளனர்.

அதில் அன்றைய திமுக ஆட்சிக்காலத்தின் போது முதல்வராக இருந்த கருணாநிதி குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதியில் இருந்த ஓலைக்குடிசைகளையெல்லாம் அகற்றிவிட்டு, மக்களின் நலன்களுக்காக அரசு தொகுப்பு வீடுகளைக்கட்டிதர உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தொகுப்பு வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவருகிறோம். ஆனால் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முதல் தனி நபர் ஒருவர் நாங்கள் குடியிருக்கும் வீடுகள் உள்ள இடத்தை, “தன்னுடைய இடம் என்று கூறி தொடர்ந்து பிரச்சனை கொடுப்பதாகவும், நான் என்ன சொன்னாலும் அரசு அதிகாரிகள் கேட்பார்கள் எனவும் எனவே உடனடியாக காலி செய்யுங்கள் இல்லை வீட்டை இடித்துவிடுவோம்“ என தெரிவித்து வருகிறார்.

மேலும் குறிச்சி கிராமத்தில் எங்களுடைய முப்பாட்டன் காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிறோம் என்றும், முன்னோர்கள் காலத்தில் இருந்தே சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளை இங்கு செய்துவருகிறோம். இப்படிப்பட்ட சூழலில், பல ஆண்டுகளாக அரசு கட்டிக்கொடுத்த வீடுகளில் வசிக்கும் எங்களை வெளியேற சொல்வது நியாயமில்லை.



எனவே இங்கு வாழும் மக்களைத் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கிவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் இந்த நகலை தமிழ்நாடு முதல்வர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு, குடிசை மாற்று வாரியம், கோவை காவல்துறை ஆணையாளர் மற்றும் தெற்கு வட்டாச்சியர், உள்ளிட்டோருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் அனுப்பியுள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...