நிதி நிறுவனம் நடத்திப் பல கோடி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கோவை வாலிபர் கைது.!!

தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி, 5,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஓராண்டுக்குப் பின் கோவையைச் சேர்ந்த வாலிபரை காவல்துறை கைது செய்தனர்.



கோவை: தமிழகம் கேரளா உட்பட பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் நடத்திப் பல கோடி மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருந்த கோவை வாலிபரை காவல்துறை கைது செய்தனர்.



கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரமேஷ், (40). இவரது தலைமையில் 15-பேர், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்' என்ற பெயரில் நிதி நிறுவனம் துவங்கினர். அதில், 25 -ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம், 10 -சதவீத வட்டி, 10- மாதம் முடியும் நிலையில், முதலீட்டுத் தொகை இரட்டிப்பு என்பன உள்ளிட்ட கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதை நம்பி, தமிழகம், கேரள மாநில மக்கள், தொழிலதிபர், அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்தனர். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த மகேஷ்(34) உட்பட 10-பேரிடம், 4.80-கோடி ரூபாய்க்கு அந்நிறுவனம் மோசடி செய்திருப்பதாக, 2020- செப்., முதல் வாரம், அப்போதைய சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு புகார் வந்தது.

அவரது தலைமையில், குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பூபதி ராஜன் அடங்கிய தனிப்படையினர் விசாரித்து, அந்நிறுவனத்தின் தலைவர் கவுதம் ரமேஷ், ஒண்டிபுதுார் பிரவீன்குமார்(30), ஆகியோரை அதே ஆண்டு கைது செய்தனர்.

இதில் மற்றொரு முக்கிய குற்றவாளியான, கோவை, ராம் லட்சுமணன் நகர் கனகராஜ்(25), என்பவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், ஓராண்டுக்குப் பின், நேற்று முன்தினம் கோவையில் பதுங்கி இருந்த அவரை, தனிப்படையினர் கைது செய்தனர். இதையறிந்த கேரள மாநில காவல்துறை, அவரிடம் விசாரிக்கச் சேலம் வந்துள்ளனர்.

இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 2,000-பேரிடம், 1,200- கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. இங்குச் சுருட்டிய பணம் மூலம், கேரள மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட கிளைகளை ஏற்படுத்தி, 7,000-பேரிடம், 3,800-கோடி ரூபாய் வரை வசூலித்து, அதைத் திருப்பி வழங்காமல் மோசடி செய்துள்ளனர். இரு மாநிலங்களிலும் மொத்தம், 5,000-கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...