'குலாப்' புயல் எதிரொலி: கோவை, நீலகிரி உட்பட 6-மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!!

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.


கோவை: தமிழகத்தில் குலாப் புயல் எதிரொலியாக 6-மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-

தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன், கனமழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.

வரும், 29, 30ம் தேதிகளில் மாநிலம் முழுதும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், 13 செ.மீ., மழை பெய்து உள்ளது.

சென்னையில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வங்கக் கடலின் வடக்கு பகுதியில் உருவான, 'குலாப்' புயல், நேற்று இரவு கலிங்க பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு அருகே நகர்ந்தது. இது, நள்ளிரவில் கரை கடந்த பின், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....