தலையெடுக்கும் பேனர் கலாச்சாரம்.. உடனே அகற்ற கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.!!

வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ள விளம்பர பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அகற்ற வேண்டும் என கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.


கோவை:வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ள விளம்பர பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அகற்ற வேண்டும் என கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கோவையில் மீண்டும் பேனர் கலாச்சாரம் உருவாகி உள்ளது. சாலையின் முக்கிய வீதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதில், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. ஒரேடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு பேனர்களை அகற்ற வேண்டும் என கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிகமாக கட்டப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் திசைமாறி விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கோவை மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ்பேனர்கள் கட்டக்கூடாது என ஐகோர்ட் அறிவித்துள்ளது.

எல்லோருக்கும் தெரிந்தும் இம்மாதிரியான அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்கள் கட்டிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி மற்றும் மின்சார வாரியம் நெடுஞ்சாலை துறை சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுப்பதோடு இல்லாமல் அவர்கள் மீது அபராதமும் தண்டனையும் வழங்க வேண்டும், காளப்பட்டியிலிருந்து விலங்குறிச்சி சரவணம்பட்டி வரையிலுள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் கோவை மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு வாகன ஓட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டம் சாலை பாதுகாப்பு சங்கம் என வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...