இடைவிடாது கொட்டும் மழை: வால்பாறை அரசு பேருந்தின் மேல் கூரை வழியாக மழை நீர் வந்ததால் சிரமம்.!!

வால்பாறையில் கனமழை பெய்து அரசு பேருந்தின் மேல் கூரை வழியாக மழை நீர் வந்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து இருக்கையில் அமராமல் நின்றுகொண்டே சென்றனர்.


வால்பாறை: வால்பாறையில் கனமழை பெய்து அரசு பேருந்தின் மேல் கூரை வழியாக மழை நீர் வந்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து இருக்கையில் அமராமல் நின்றுகொண்டே சென்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பேருந்து உள்ளன. வால்பாறை 60-எஸ்டேட் பகுதிகளில் 25-பேருந்துகளும் மற்ற பேருந்துகள் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி பகுதி மற்றும் கோயம்புத்தூர் திருப்பூர் பகுதி பழனி பகுதிக்குச் செல்கிறது.

வால்பாறை பகுதியில் இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை என்பதால் வழக்கமாகப் பள்ளி மாணவ- மாணவிகள் பள்ளி பேருந்தில் வந்தனர்.

வால்பாறையிலிருந்து அரசு பேருந்து வால்பாறையிலிருந்து இஞ்சிபாறை எஸ்டேட் பகுதிக்குச் சென்று அங்கிருந்து ஏழு முப்பது மணி அளவில் கிளம்பிவால்பாறை பகுதிக்கு அரசு பேருந்து வரும் இந்த பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவர்கள் அதிகமாக வந்தனர்.

இன்று கனமழை பெய்ததால் பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் பேருந்துக்குள் நுழைந்து பயணிகள் மேல் தெளித்து பயணிகள் உடை நனைந்து சிரமப்பட்டனர்.

இதில் பள்ளி மாணவ-மாணவிகள் அதிகமாகச் சிரமப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து இருக்கையில் அமராமல் நின்றுகொண்டே பேருந்தில் வந்தனர்.

இதனால், பெரும் சிரமத்தில் உள்ளானார்கள். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....