நாடு முழுவதும் இன்று பந்த்..! கோவையில் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு - விவசாயிகள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் தகவல்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி (நாளை) நாடு முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவை மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


கோவை: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி (இன்று) நாடு முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவை மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட கோவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி கூறியதாவது:

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பினர் வரும் 27ம் தேதி மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்ப வலியுறுத்தியம், 2020 புதிய மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு, ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் இன்று கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ரயில் நிலையங்களில் விவசாயகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பல்வேறு, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும் அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறையினர், தொழில் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....