பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில் மாரத்தான் போட்டி.!!

முதல் பரிசு பெற்றவர்களுக்கு 10-ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு 5000- ரூபாய், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு 2500-ரூபாயும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


பொள்ளாச்சி: பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில் திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் துணை அமைப்பாளர் நவநீத கிருஷ்ணன் ஏற்பாட்டில் மாரத்தான் போட்டி இன்று மகாலிங்க புரம் ரவுண்டானா அருகே நடைபெற்றது.

இப்போட்டியைக் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் 5-வயது முதல் 60-வயதினருக்கு, பொள்ளாச்சியிலிருந்து ராசக்காபாளையம் வரை 7-கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



பெண்கள் பிரிவினருக்குப் பெண்கள் பிரிவில் 8-வயது முதல் 40-வயது உட்பட்டவர்கள் பொள்ளாச்சியிலிருந்து புளியம்பட்டி வரை 5-கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முதல் பரிசு பெற்றவர்களுக்கு 10-ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு 5000- ரூபாய், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு 2500-ரூபாயும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...