கோவையில் அவுட் காய் வைத்திருந்தவர் கைது - மாவட்ட எஸ்.பி. உத்தரவில் போலீசார் துரித நடவடிக்கை

காரமடை பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அவுட்டு காய் வைத்திருந்த கார்த்தி என்பவரை மடக்கிப்பிடித்தனர்.


கோவை: சட்டத்திற்கு விரோதமாக அவுட் காய் வைத்திருந்த, கோவை கணுவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களைப் பிடிக்க, ரோந்து பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோவை மாவட்டம், காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், முனுசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் உதவி ஆய்வாளரை கண்டதும் அவ்விடத்தை விட்டு தப்பிக்க முற்பட்டுள்ளார். இதனைக் கண்ட உதவி ஆய்வாளர், சந்தேகமடைந்து அந்நபரைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து, காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் ஆய்வாளர் குமார், அந்த நபரை விசாரித்தபோது அவர் கணுவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) என தெரியவந்தது. மேலும், அவரது கையில் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது அதில் சட்டத்திற்கு விரோதமாக காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்பட்ட அவுட் காய் வைத்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், கார்த்தியை கைது செய்து அவரிடமிருந்த அவுட் காயைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....