மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று அரசு நிர்பந்திக்கவில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகள் அதையே பின்பற்ற வேண்டும்.
கோவை: கோவை காளப்பட்டி அருகே வீரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து இந்திய அளவில் யூ.பி.எஸ்.இ தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜசேகருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் பொய்யாமொழி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேசிய அவர் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தபட்டு கொண்டிருக்கிறது என்றும் ஏ.கே.ராஜன் கமிட்டியிலும் கூட அனைவரும் நீட் வேண்டாம் என்ற கருத்தையே தான் கூறியிருக்கின்றனர் எனவும் இரண்டு முறை டெல்லி சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அதற்கான அழுத்ததை கொடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில், ஒன்று முதல் எட்டு வரை வகுப்புகள் திறக்க இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் கட்டாயம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வர வேண்டும் என அரசு எந்த இடத்திலும் கூறவில்லை எனவும் மாணவர்களை காட்டாயம் வரவேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டாம் என பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர், கல்வி தொலைக்காட்சி மூலம் 8,000 வீடியோக்கள் தயார் செய்து வைத்துள்ளோம், அதன் மூலம் மாணவர்கள் படிக்கட்டும், என்றார்.
பள்ளிகளுக்கு மாணவர்கள் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வரவில்லை என்றால் ஏன் வரவில்லை என்று மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கேட்க வேண்டுமே தவிர, கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்று ஆணையிடுவது கூடாது என்றார்.
மேலும், மாணவர்கள் இடைநிற்றல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக குறிஞ்செய்தி மூலமாகவோ அல்லது வேறு வடிவிலோ, குழந்தை வேறு பள்ளிக்கு மாறிவிட்டதா? ஏன் பள்ளிக்கு வரவில்லை? என ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றோம், என்றார்.