கோவை மாவட்டத்தில் செயல்படும் ரோந்து வாகனங்களை தவிர, கூடுதலாக மூன்று ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை இன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிமுகப்படுத்தினார்.
கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, அதிரடி நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் செயல்படும் ரோந்து வாகனங்களை தவிர, கூடுதலாக மூன்று ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை இன்று (25.09.2021), கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன்படி, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் ரோந்து வாகனம் மூலம் காவல்துறையினர் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த ரோந்து பணி நேரடி உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களின் உதவியுடன் செயல்பட உள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.