கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அழகு நிலையத்தில் விபச்சாரம் செய்து வந்த நபர் கைது. மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.
கோவை: கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் வயது 38. இவருக்கு ராவத்தூர் பிரிவில் சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை, தேனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு அழகு நிலையம் நடத்த வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நவநீதகிருஷ்ணன் அங்கு சென்ற போது, சில வாலிபர்கள், அழகு நிலையத்திற்குள் ரகசியமாக உள்ளே சென்று வருவதைப் பார்த்து சந்தேகம் அடைந்தார். இதனால், அவர் அவர்களிடம் விசாரித்த போது, அந்த அழகு நிலையத்தில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த நவநீதகிருஷ்ணன், இது குறித்து சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடத்துவது தெரியவந்ததையடுத்து, விபச்சாரம் நடத்தி வந்த புரோக்கரான, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் வயது 26 என்பவரை கைது செய்தனர்.
மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயது பெண், திருப்பூரைச் சேர்ந்த 33 வயது பெண், கொல்கத்தாவைச் சேர்ந்த 26 வயது மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த 27 வயது பெண், ஆகிய 4 பெண்களையும் மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவையில் தொடர்ந்து மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.