4 மாதங்களுக்குள் ஒரு கிலோ கொப்பரை ரூ.100-க்குள் குறைந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகளை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் விடுத்த கோரிக்கையில், முக்கியமாக கொப்பரை விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 4 மாதங்களுக்குள் ஒரு கிலோ கொப்பரை ரூ.100-க்குள் குறைந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகளை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. விவசாயிகள் நெல் நடவு பணிகள் தொடங்க இன்னும் 10 முதல் 20 நாட்களாகும். ஆகவே, அதுவரை சிக்கனமாகத் தண்ணீரை விநியோகம் செய்ய வேண்டும். பழைய அமராவதி வாய்க்கால்கள் மண் வாய்க்கால்களாக உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்பதால், போர்க்கால அடிப்படையில் அவற்றை சீரமைத்தால் மகசூல் முழுமை பெறும். வெங்காயத்துக்கு போதிய விலை இல்லாததால், ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல, மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும். அவர்கள் பங்கேற்றால் தான், பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உப்பாறு அணைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். அமராவதி உபரி நீர் வீணாக ஒவ்வொரு ஆண்டுகள் பல டிஎம்சி கடலில் கலக்கிறது. அதனை தடுத்து உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு, பல ஆண்டு பிரச்சினைக்கு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
மேலும், விவசாயிகளிடம் பயிர்க்கடனுக்காக பெற்ற நகைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். நடப்பாண்டில் பருவமழை தொடங்கியிருப்பதால், விவசாயிகளிடம் பெற்ற நகைகளை விரைவில் ஒப்படைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் கடைசியாக விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிட்டனர். இந்த நிலையில் அது தொடர்பாக நடவடிக்கை எதுவும் இல்லை.
எனவே, அதனை முறைப்படுத்தி தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டுவரமால், முள்காடாக உள்ளது. பதவியேற்றுள்ள புதிய அரசு 45 ஆண்டுகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும். இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்றனர்.

இறுதியாக, விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.