வால்பாறை அருகே நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்..! பொதுமக்கள் அச்சம்.!!

காட்டு யானைகளை குடியிருப்பில் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மூன்று காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது நியாயவிலைக் கடையை உடைத்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் யானைகளை விரட்ட வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.



யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகள், நியாயவிலைக் கடைகள், மளிகை கடைகள் மற்றும் சத்துணவு மையங்கள் போன்றவற்றில் உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே உபாசி எஸ்டேட் பத்தாம் பாத்தி பகுதியில் இரவு சுமார் ஒரு மணி அளவில் மூன்று காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து அங்குள்ள நியாயவிலைக்கடை ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை வெளியே எடுத்து சிதறி தின்றும் சேதப்படுத்தியது.

இதையடுத்து, இரவு நேரத்தில் அப்பகுதி பொதுமக்கள் யானைகளை தீப்பந்தங்கள் வைத்தும், வீட்டில் இருந்த பாத்திரங்களை வைத்து தட்டியும் அங்கிருந்து விரட்டினர்.

இதனிடையே, வனத்துறையினர் யானைகளை விரட்ட வரவில்லை என்று புகார் தெரிவித்த பொதுமக்கள், காட்டு யானைகளை குடியிருப்பில் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....