வங்கி கணக்கில் இருந்து 8.8 லட்சம் மற்றும் நகை கடன் பெறுவதாக வாங்கிய 22 பவுன் நகை ஆகியவற்றை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை: கோவையில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 8.8 லட்சம், 22 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட தாய் மற்றும் மகளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் ராஜன் நகரைச் சேர்ந்தவர் கீதா (38), இவர் கோவை காட்டூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவை காட்டூர் ராம்நகர் நஞ்சப்பன் தெருவில் எனது பெற்றோர்கள் வசித்து வருகின்றனர். இருவரும் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை பார்க்க வீட்டுக்கு அடிக்கடி செல்லும் போது எனக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த மேரி மற்றும் அவரது மகள் ஜூலியானா ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர்.
இந்நிலையில், எனது பெற்றோரின் மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. அதற்கு மேரி மற்றும் அவரது மகள் வங்கியில் நகைக் கடன் வாங்கி தருவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எனது தாயை வங்கிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், வங்கி கணக்கில் இருந்து ரூ. 8.8 லட்சம் மற்றும் நகை கடன் பெற வாங்கிய 22 பவுன் நகை ஆகியவற்றை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், காட்டூர் போலீசார் ராம்நகர் நஞ்சப்பன் தெருவைச் சேர்ந்த மேரி அவரது மகள் ஜூலியானா ஆகிய இருவர் மீதும் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.