மேலும், பொய் செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: பாரத பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான முந்ரா துறைமுகத்திற்கு சமீபத்தில் வந்த சரக்கு கப்பலில் ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நடந்த அதிரடி சோதனையில் ஈரானிலிருந்து வந்த இரண்டு கன்டெய்னர்களில் கடத்திவரப்பட்ட சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் பிடிபட்டது. இதில் தொடர்புடைய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை சென்னையில் கைது செய்தனர்.
இந்நிலையில், இது குறித்து செய்தி வெளியிட்ட தமிழகத்தை சேர்ந்த கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், போதை பொருள் கடத்தல் சம்பவம் மோடியின் தயவுடன் நடைபெறுவது போல் செய்தி வெளியிட்டது..
இந்த நிலையில், பாரத பிரதமர் மோடி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்டு பொய் செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும், பொய் செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அளிக்கப்பட்டுள்ள புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.