பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி அவர்களின் 123வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

இந்த விழாவில் தகவல் மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி அவர்கள் 123வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

1899ல் உடுமலை அருகே உள்ள பூளவாடி கிராமத்தில் பிறந்தவர் நாராயணகவி. தனது 15வது வயதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை சந்தித்த பிறகு தமிழ் மீது ஆர்வம் கொண்டார்.

இவர் கவிதைகள் மீது கொண்ட ஆர்வத்தால் மதுரை சென்று சினிமா, நாடகங்களில் பல்வேறு கவிதை மற்றும் கதைகளை இயற்றியுள்ளார். திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு N.S. கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, எம்ஜிஆர் ஆகியோருடன் நட்புறவுடன் இருந்து வந்தார்.

பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர், பொதுவுடமை, சமத்துவம், பெண்ணுரிமை மற்றும் பகுத்தறிவு பாடல்களை இயற்றியுள்ளார். இவரது தமிழ் திரைப்பட பாடல்கள் மிகவும் பிரபலமானது. இவர் பாடல் எழுதிய கண்ணகி, மகா மாயா கிருஷ்ணபக்தி வேலைக்காரி, சொர்க்கவாசல், பராசக்தி போன்றவை புகழ் பெற்று விளங்கியது.

இவருக்கு சங்கீத நாடக சங்கத்தின் சார்பில் சாதித்ய ரத்னாகா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவர் முதுமை காரணமாக தனது சொந்த ஊரில் 1981ல் தனது 82வது வயதில் காலமானார். இவரது நினைவாக உடுமலையில் 2001ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதி ஆட்சியில் இவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.



இந்நிலையில், இன்று இவரது 123வது பிறந்தநாள் விழா உடுமலையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தகவல் மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....