உடுமலை நகராட்சி மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது நகர மாநாடு..!

உடுமலை அரசு மருத்துவமனைக்கு கிழபுறம் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தை மீட்டு அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை நகராட்சி மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது நகர மாநாடு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு கிழபுறம் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தை மீட்டு அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும், நகரில் பாதாளச் சாக்கடை திட்டக் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றுகளுக்கு அதிக கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



அதேபோல, உடுமலை அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் செய்தவுடன் சோதனை அறிக்கையை வழங்க நுண்கதிர் மருத்துவ நிபுணரை நியமிக்க வேண்டும், பொதுமக்களுக்கு இடையூராக பசுபதி வீதியில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும், நகராட்சி அண்ணா பூங்காவை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், தாராபுரம் ரோடு துவக்க பள்ளி அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்க வேண்டும், விவசாய விரோத வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரக்குழு செயலாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், புதிய நகரக்குழு, மாவட்ட மாநாட்டு பிரிதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நகர மாநாட்டில், மாவட்டச் செயற்குழு ரங்கராஜ், குமார், மதுசூதனன், ராஜகோபால், கமிட்டி உறுப்பினர்கள் மாலினி, சுதா சுப்பிரமணியம், ராசா, விஸ்வநாதன் செல்லத்துரை, வசந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....