கடந்த 2014ம் ஆண்டு முதல் கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவர கடைபிடிக்கப்படாமல் போன நிலையில், தற்போது உரிய கூலி உயர்வு வழங்க கோரி அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் நடைபெற்ற விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2.5 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. கூலிக்கு நெசவு செய்யும் 35 ஆயிரம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு முதல், கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவர கடைபிடிக்கப்படாமல் போன நிலையில், தற்போது உரிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு நேற்று மாலை நடந்தது. இதில், கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் சோமனூர் தலைவர் பழனிசாமி, பல்லடம் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, பேச்சுவார்த்தை முடிவுகள் எதுவும் எட்டப்படாமல், அக்., 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.