தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதன் காரணமாக மூன்று வாரங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை அன்னூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிரொலியால் குறைகேட்பு முகாம் 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னூர் தாலுகா அலுவலகத்தில், மூன்று வாரங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்களன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடந்து வந்தது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆறு வாரங்களாக தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. அன்னூர் ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர் தேர்தல், வரும் 9ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 12ம் தேதியும் நடக்கிறது.
இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அன்னூர் தாலுகா அலுவலகத்தில் வரும் 27, அக்.,4, அக்.11 ஆகிய மூன்று வாரங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.