கொரோனா ஊரடங்கு தளர்வுகள்; கோவை குற்றாலத்தில் வார இறுதி நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி..!

சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்த அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்தில் வார இறுதி நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா நோய் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து, தற்போது பிரத்யேக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதியிலும் 19ஆம் தேதியிலும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அவற்றில் 2.5 லட்சம் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய 24.5 லட்சம் (80 சதவீதம்) பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று மற்றும் நாளை கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலத்தில் பின்வரும் அட்டவணைப்படி சுற்றுலா பயணிகள் இன்றும் மற்றும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், பராமரிப்பு பணி மேற்கொள்ள திங்கட்கிழமை வார விடுமுறை அனுசரிக்கப்படும்..

வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) கீழ்க்கண்டவாறு சுற்றுலா பயணிகள் கொரோனா குறித்த அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவர்..

09.00 - 10.00 = 250

10.30 - 11.00=250

12.00 - 12.30=250

01.30 - 02.00=250

மொத்தம் = 1000

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....