வால்பாறையில் வனச்சரக அலுவலர் கைதை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 18-வனக் கோட்டங்களை சேர்ந்த 33-வனச்சரக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை: வால்பாறையில் வனச்சரக அலுவலர் கைதை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 18-வனக் கோட்டங்களை சேர்ந்த 33-வனச்சரக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சிற்குன்றா வனப்பகுதியில் இரவு நேரத்தில் வனப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த சிலரை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் யானைகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இரவு நேரத்தில் சுற்ற வேண்டாம் என்று கண்டித்துள்ளார்.
இதில் அந்த இளைஞர்களுக்கும் வனச்சரக அலுவலர் இருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு அங்கு இருந்து சென்றவர்கள் வனச்சரக அலுவலர் மீது புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் மீது 3- பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக 18-வனக் கோட்டங்களைச் சேர்ந்த 33- வனச்சரக அலுவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் கைது குறித்து அறிந்த வனச்சரக அலுவலர்கள் மேட்டுப்பாளையம் அரசு மரங்கிடங்கு பகுதியில் தமிழகக் காவல்துறை மற்றும் நீதித் துறையைக் கண்டித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் உடனடியாக வால்பாறை வனச்சரக அலுவலரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் வனத்துறை சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.