கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.!!

கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்கு தபால்காரர்கள் சங்க மாவட்ட தலைவர் கோபால் தலைமை தாங்கி பேசியதாவது:-

தொழிற்சங்கத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மத்திய அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளது. குறிப்பாகத் தொழிற்சங்கங்களில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கு அரசு கூறும் நபர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு, ஒரு பொறுப்பில் ஒரே நபர் 2-முறைக்கு மேல் இருக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.



இத்தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இதனை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....