பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பு.!!

பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நிலையில், திறம்படச் செயல்பட்ட மகளிர் காவல்துறைக்கு எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பாராட்டு தெரிவித்துள்ளார்.


கோவை: பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபருக்குக் கோவை கோட்டத்தின் மையம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. வழக்கைத் திறம்பட நடத்திய மகளிர் காவல்துறையை மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டினார்.

கோவை மாவட்டம், ஆலந்துறை காவல் நிலைய பகுதியில் பொன்னி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் வசித்து வந்துள்ளார்.

மேலும் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் என்பவர் பொன்னியின்(பெயர் மாற்றம் செய்யப்பட்டது) மீது ஆசை கொண்டு அவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

கடந்த வருடம் 18.09.2020-ம் தேதி பொன்னி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் கழிவறைக்குச் செல்லும்போது அவரை பின் தொடர்ந்து சென்ற உதயகுமார் கழிவறைக்குள் மேற்படி பொன்னி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இது சம்பந்தமாக விஜயலட்சுமி என்பவர் ஆலந்துறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு மேற்படி வழக்கின் குற்றவாளியான உதயகுமாரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

இவ்வழக்கு சம்பந்தமாக மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று இன்று (23.09.2021) வழக்கு விசாரணை முடிவு பெற்று குற்றவாளியான உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் சிறந்த முறையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்றத்தில் சாட்சிகளைச் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல் தெரிவித்திட அழைத்திடுங்கள் 1098, 94981-81212, 77081-00100...

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....