கோவையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இளஞ்சிறார் மறுவாழ்வு முகாம்.!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 18-முதல் 21-வயது வரை உள்ள இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான முகாம் நடத்தப்பட்டது.



கோவை: குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளஞ்சிறார் மறுவாழ்வு முகாம் மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பங்கேற்றார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி முன்னிலையிலும் இன்று (24.09.2021) காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 18-முதல் 21-வயது வரை உள்ள இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான முகாம் நடத்தப்பட்டது.



இம்முகாமில் சுமார் 100-இளஞ்சிறார்கள் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை தாங்கி செல்வ நாகரத்தினம் பேசியதாவது:-







சூழ்நிலைகளைக் காரணம் காட்டி சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், கஷ்டப்பட்டால் தான் பலன் கிடைக்கும் எனவும், ஒருமுறை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு விட்டோம் என்பதைக் காரணமாகக் கொண்டு மறுமுறையும் அதனைத் தொடரக்கூடாது எனவும், இளைஞர்களுக்கு எடுத்துக்கூறி வாழ்வில் முன்னேற வேண்டும் மற்றும் நாம் முன்னேறுவதால் கிடைக்கும் பலன் பற்றியும் எடுத்துக்கூறினார்.

அவர்களின் வாழ்விற்கு நல்வழி காட்டும் வகையில் அறிவுரை வழங்கினார். மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களின் கல்வித்தகுதி மற்றும் அவர்களின் தேவைகள் காவல்துறையினரால் கேட்டு அறியப்பட்டது.



மேலும், இளஞ்சிறார்களுக்கு கல்வி உதவித் தொகையோ, வேலைவாய்ப்போ, அவர்களின் குடும்பத்திற்கு உதவும் எண்ணம் உடையவர்கள் உதவலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.



இளஞ்சிறார்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டோம் என கவலை கொள்ளாதீர்கள்... உங்களுக்காக உதவக் கோவை மாவட்ட காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.. உங்கள் குடும்பங்களை நினைத்து குற்றங்களை தவிர்த்துவிடுங்கள்... வாழ்வில் கடைசி வரை நம்முடன் பின்தொடர்வது நமது சாதனைகள் மட்டுமே... சட்ட விரோத செயல்கள் அல்ல... உணர்ந்திடுங்கள்.... உறவுகளை இழந்துவிடாதீர்கள்‌....



Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....