மாநகர கமிஷனர் உத்தரவு எதிரொலி: கோவையில் காவல்துறை பல குழுக்களாக பிரிந்து ஸ்ட்ரோமிங் ஆபரேஷன்.!!

கோவை மாநகர பகுதியில் 10-மணி முதல் 4-மணி வரை காவல்துறை பல குழுக்களாகப் பிரிந்து ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் என சொல்லக்கூடிய முன் அறிவிப்பு இன்றி திடீர் சோதனை பணிகளை மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகர பகுதியில் 10-மணி முதல் 4-மணி வரை காவல்துறை பல குழுக்களாகப் பிரிந்து ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் என சொல்லக்கூடிய முன் அறிவிப்பு இன்றி திடீர் சோதனை பணிகளை மேற்கொண்டனர்.

கோவை மாநகரத்துக்கு உட்பட்ட 15-காவல் நிலைய எல்லைக்குள் ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் என சொல்லக்கூடிய முன் அறிவிப்பு இன்றி திடீர் சோதனை பணிகளை காவல்துறை நேற்று மேற்கொண்டனர்.

இந்த ஆபரேஷன் இரவு 10-மணிக்கு தொடங்கி அதிகாலை 4-மணி வரை நீடித்தது. இதில் முக்கிய குற்றவாளிகள் கஞ்சா, போதை மாத்திரை, பிக்பாக்கெட் ஆசாமி, முன்னாள் குற்றவாளிகள், என பலர் சிக்கினர்.

மாநகர கமிஷனர் தீபக் தாமேக் உத்தரவின் பேரில் காவல்துறை இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாநகர காவல்துறை மாதத்திற்கு ஒரு முறை ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் என்று சொல்லக்கூடிய திடீர் ஆய்வு செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று தமிழகக் காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிக்கையில் கூறியிருந்தார். அதில் அவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரவுடிகள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 10-மணிக்குக் கோவையில் மாநகரத்துக் உட்பட்ட பகுதிகளான ரயில் நிலையம், ரயில் நிலையத்தைச் சுற்றி உள்ள விடுதிகள், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், சுற்றி உள்ள லாட்ஜ்கள், கோவை விமான நிலைய பகுதியில் உள்ள லாட்ஜ்கள், கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆனவர்கள், அடிதடி வழக்குகளில் உள்ளவர்கள்.

கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு ஜாமினில் உள்ளவர்கள், போதைப்பொருள் விற்பனை செய்யக் கூடியவர்கள், மூன்றுக்கு மேற்பட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர்கள்.

கோவையில் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகள், வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்த பயணிகள் என அனைத்து தரப்பு மக்களிடமும் இரவு 10-மணி முதல் அதிகாலை 4-மணி வரை 25-க்கும் மேற்பட்ட குழுக்களாக இன்ஸ்பெக்டர் தலைமையில் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள், முன்னால் ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள், வழிப்பறி ஆசாமிகள், பல்வேறு குற்றவாளிகள் சிக்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அதனால் நேற்று இரவு முழுவதும் கோவை மாநகரில் அனைத்து இடங்களிலும் காவல்துறை தீவிர ரோந்து பணி சோதனையில் ஈடுபட்டதால் முக்கிய குற்றவாளிகளுக்கு அச்சத்தை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....