கோவையில் எஸ்டிபிஐ கொடிக்கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்.!!

ராஜ்நகர் நுழைவு வாயிலில் 10-ஆண்டுகளாக எஸ்டிபிஐ கட்சியின் கொடிக்கம்பம் இருந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அதனை அகற்றியதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: எஸ்டிபிஐ கொடிக்கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சாய்பாபா கோவில் ராஜ்நகர் நுழைவு வாயிலில் 10-ஆண்டுகளாக எஸ்டிபிஐ கட்சியின் கொடிக்கம்பம் இருந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அதனை அகற்றியது. இதனைக் கண்டித்து கோவையில் சாய்பாபா கோவில், உக்கடம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சாய்பாபா கோவில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடக்கு தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் காவல்துறையைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....