திருப்பூரில் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் இணைந்து 3-ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சிறப்பிக்கும் விழா.!!

தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3-ஆண்டுகளில் 92-கோடியில், 40-ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளதாக செய்தித்துறை அமைச்சர் தகவல்.


திருப்பூர்: திருப்பூரில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் இணைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்துச் சிறப்பிக்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத்திற்கும் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்தது.

செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் இணைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

இதனைச் சிறப்பிக்கும் விதமாகத் திருப்பூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, 3-அரசு மருத்துவமனைகள் மற்றும் 28-தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கூடுதலாக 4-அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தின் மூலம் 92-கோடியே 64-லட்சம் செலவில் 40-ஆயிரத்து 178- பேர் பயன் அடைந்துள்ளனர் என்றார்.



தொடர்ந்து விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் பயன் அடைந்தவர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....