ஈமு கோழி மற்றும் நாட்டுக்கோழி நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கு; இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.78 லட்சம் அபராதம்..!

இரண்டு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில், இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 78 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிபதி தீர்ப்பளித்தார்.


கோவை: ஈமு கோழி மற்றும் நாட்டுக்கோழி நிதி நிறுவனம் தொடங்கி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சென்னிமலையைச் சேர்ந்த குமார் (49), திருப்பூர், ராமு காலனியைச் சேர்ந்த கார்த்திகேயன் (50), ஆகியோர் சேர்ந்து, தாராபுரத்தில் 'ஓம்சக்தி ஈமு பார்ம்' என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக விளம்பரப்படுத்தினர்.

முதலீடு செய்த 25 பேருக்கு பணத்தை திருப்பி தராமல், 58 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவில் 2012ல் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இருவரையும் கைது செய்து, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ரவி, இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை, 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், இதே நபர்கள் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில், ஓம்சக்தி நாட்டுக்கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி, 16 பேரிடம் 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, இவர்கள் மீது தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்தது. இதனை விசாரித்த நீதிபதி ரவி, இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 23 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....