பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை வனச்சரகத்தில், கல்லார்குடியில் உள்ள காடர் இன பழங்குடியின மக்களுக்கு, பாரம்பரிய இடத்தில் பட்டா வழங்கி குடியமர்த்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை வனச்சரகத்தில், கல்லார்குடியில் உள்ள காடர் இன பழங்குடியின மக்களுக்கு, பாரம்பரிய இடத்தில் பட்டா வழங்கி குடியமர்த்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை அருகே உள்ள கல்லாறு குடி காடர் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியில் பாரம்பரியமாக 25-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 3-ஆண்டுகளுக்கு முன்பு மழை வெள்ளத்தில் குடியிருப்புகள் சேதமடைந்தது. இதனையடுத்து, தற்போது அவர்கள் வால்பாறை தேயிலைத் தோட்ட பகுதியில், தற்காலிக குடில் அமைத்து வசித்து வரும் நிலையில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை எனவே தங்களைப் பாரம்பரிய இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
உடனடியாக பழங்குடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக கோட்ட வனத்துறை அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திக, கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மலைவாழ் மக்களுக்குப் பட்டா வழங்கி குடியமர்த்த வேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பாரம்பரியமாக வசித்து மலைவாழ் மக்கள் மூன்றாண்டுகளுக்கு மேலாக வீடுகளை இழந்து ஒரே இடத்தில் வசித்து வருகின்றனர். இதனால், எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.
எனவே, தமிழக அரசு உடனடியாக கல்லாறு குடியில் பட்டா வழங்கி குடியமர்த்த வேண்டும் இல்லை என்றால் போராட்டங்கள் தீவிரமடையும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.